[X] Close >

இதுதான் பெண்கள் மீதான அக்கறையா? - பாபநாசத்தை விளாசித் தள்ளிய மாரி செல்வராஜ்.

mari-selvaraj-criticizing-papanasam---viral-video

இயக்குநர் மாரி செல்வராஜ் கல்லூரியொன்றில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகியிருக்கிறது.


Advertisement

திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியிருக்கிறது. அதில் மாரி செல்வராஜ், பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியான பிறகு அதன் எதிரொலி பொள்ளாச்சி, கோவை  பகுதிகளில் எப்படி இருக்கிறது எனப் பேசி இருக்கிறார். அதில் பொள்ளாட்சி, கோயம்புத்தூர் பகுதியில் பல மாணவிகளின் படிப்பை அவர்களின் குடும்பங்கள் நிறுத்திவிட்டதாகவும், பல வீடுகளில் பெண்கள் செல்போன் பயன்படுத்துவது தடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.

image


Advertisement

தான் இயங்கிவரும் சினிமாத்துறையில் இருந்தும் ஒரு உதாரணத்தை எடுத்துப் பேசி இருக்கிறார். கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படம் குறித்து விரிகிறது அந்த உரையாடல். அதில், பாபநாசம் திரைப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அப்படத்தில், கமல்ஹாசனின் மகளாக வரும் பெண் தன்னை வீடியோ எடுத்து மிரட்ட முயன்ற இளைஞரை எதிர்பாராதவிதமாக கொலை செய்து விடுவார். இப்படம் குறித்து பேசும் மாரி செல்வராஜ் அப்படத்தில் நாயகன் எங்குமே தன் மகளிடன் உன்னை படம் எடுத்த அவன் தான் வெட்கப்படனும், நீ ஏன் வெட்கப்படனும் என சொல்ல மாட்டார். அவர் தன் மகளை காப்பாற்றிவிட்டுப் போவார். மகளை காப்பாற்ற பெரிய திட்டங்களை வகுக்கும் நாயகன், படத்தில் எங்குமே தன் மகளுக்கு உன்னை உன் அனுமதியின்றி வீடியோ எடுத்தது வீடியோ எடுத்தவனின் குற்றம் உன் குற்றம் அல்ல என்று குறிப்பிடவே மாட்டார். என பதிவு செய்திருக்கிறார்.

உண்மையில் மாரி செல்வராஜின் இந்த கருத்து ஏற்புடையதாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரம் பாபநாசம் படத்தில் சுயம்பு லிங்கம் எனும் மனிதர் ஒரு எளிய சராசரி வாழ்க்கையை வாழ்கிறார். அவரது கதாபாத்திரத்தின் வழியாக பார்க்கும் போது ஒரு எளிய தகப்பன் அப்படித்தான் யோசிப்பார் எனவே கதையாக அது சரிதான் என்பதான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில் சுயம்புலிங்கத்தின் மகளுக்கு தொல்லை கொடுத்தது ஒரு போலீஸ் அதிகாரியின் மகன். அதனால், சுயம்புலிங்கத்திற்கு இருந்த பயம் உண்மையில் அதிகாரத்திற்கு எதிரான எளிய மனிதர்களின் பயமாகதான் கருத வேண்டியிருக்கிறது.


Advertisement

image

இப்படி ஒரு கோணம் இருந்த போதிலும் கலைக்கு சமகால சமுதாயத்தை வடிவமைக்கும் முக்கிய பொறுப்பு உண்டு. எனவே பெண்கள் இதுபோன்ற சூழல்களை தாங்களாகவே தைரியத்துடன் எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனச்சொல்ல வேண்டியது சினிமாவின் கடமை.

Related Tags : kamalhasanmari selvarajtamil cinemacinema news
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close