[X] Close >

மேற்குவங்க அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமா

West-Bengal-Minister-Laxmi-Ratan-Shukla-resigns-his-post

மேற்கு வங்கத்தின் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா தனது பதவியை ராஜினாமா செய்தார்.


Advertisement

முன்னாள் கிரிக்கெட் வீரரும், மேற்கு வங்கத்தின் ஹோவ்ரா மாவட்டத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஐடி துறை தலைவர் அமித் மால்வியா, சுக்லாவின் ராஜினாமா செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது மேற்கு வங்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கெனவே போக்குவரத்து அமைச்சர் சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்திருக்கிறார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close