[X] Close >

அரசு வேலை வாங்கித்தருவதாக போலி பணி ஒதுக்கீட்டு ஆணை - சென்னையைச் சேர்ந்த இருவர் கைது

6-lakh-scam-to-get-government-jobs-Two-arrested-from-Chennai


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

image


Advertisement

சென்னை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் ஐஏஎஸ் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை நகல் வந்தது என்றும் அந்த போலியான நகல் தயாரித்து பயன்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவில் உள்ள மரபு சாரா குற்ற விசாரணை பிரிவு (Conventional Crime) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


விசாரணையில் சென்னை புளியந்தோப்பு, ஆசீர்வாதபுரம் 5 வது தெருவை சேர்ந்த நாகேந்திரராவ் மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஞானசேகர்
(சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தொழில் துறையில் உதவியாளராக பணியாற்றுபவர்) ஆகிய இருவரும் சேர்ந்து ராமாபுரத்தைச் சேர்ந்த பத்மாவதி மற்றும் செம்பியத்தை சேர்ந்த சாஹிரா ஆகியோரிடம் டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6 லட்சம் பணம் பெற்றுள்ளனர். மேலும் வேலை வாங்கித்தருவதாக கூறி, அவர்களுக்கு போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கி ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இதனிடயே அவர்கள் இருவரும் தலைமறைவான நிலையில், அவர்களை தேடி கண்டறிந்து கைது செய்த காவல்துறைனர் விசாரணை நடத்தியதில், அவர்கள் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.


மேலும் இதுவரை இதே போல் 45 பேரிடம் மோசடியில் ஈடுபட்ட இவர்கள், அதிகபட்சமாக 6 லட்ச ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு இருவரையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Advertisement

இவர்களுக்கு அரசு உயர் அதிகாரிகள் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கண்டறிய காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close