ஆன்லைன் கடன் விவகாரத்தில் சீனாவை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு உண்டு என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.
ஆன்லைன் கடன் மோசடி குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆன்லைன் கடன் விவகாரத்தில் சீனாவை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு உண்டு. ஆன்லைன் கடன் கொடுத்து டார்ச்சர் தந்த சீனாவைச் சேர்ந்த 2 பேர் உட்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், லேப்டாப், செல்போன், இரண்டு வங்கிகணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடன் வழங்க பணம் இருந்து வருகிறது. எங்கெங்கு வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.
சமூக வலைதளங்களில் வரும் லோன் ஆப்பை பயன்படுத்தி கடன் பெறுவது கூடாது. எதிர்பாராத விதமாக சமூக வலைதளங்களில் வரும் ஆப்ஷனை கிளிக் செய்துவிட்டால் மொபைல் போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களையும் பதிவு செய்து கொள்வார்கள்.
கடன் வாங்கியவர்களில் யாரேனும் கடன் தொகையை கட்டமுடியவில்லை என்றால் அவர்களின் செல்போனில் இருந்து எடுத்த அனைத்து நபர்களுக்கும் இவரை பற்றி தவறாக மெசேஜ் அனுப்புவது, போன் கால் செய்வது போன்று தொந்தரவு செய்வார்கள். அதனால் லோன் அப்ளிகேஷனை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.” என்றார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?