சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது கொடுத்து கவுரவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). கடந்த பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது என வெவ்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ளார் இந்திய கேப்டன் கோலி.
வெற்றி பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் அவர்கள் என்றுமே மறக்க முடியாத நினைவு பரிசை கொடுத்துள்ளது ஐசிசி. இதற்காக மும்பையில் உள்ள கல்ச்சர் ஷாப் மற்றும் ஓவிய கலைஞர் பிரதாப் சால்கேவுடன் இணைந்து இந்த விருதுகளுக்கு ஐசிசி வடிவம் கொடுத்துள்ளது.
?? VIRAT KOHLI is the ICC Men’s ODI Cricketer of the Decade ??
? Only player with 10,000-plus ODI runs in the #ICCAwards period
? 39 centuries, 48 fifties
?️ 61.83 average
✊ 112 catches
A run machine ?? pic.twitter.com/0l0cDy4TYz — ICC (@ICC) December 28, 2020
சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்
இந்திய அணியின் கேப்டன் கோலி சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஐசிசி அறிவித்த கடந்த பத்து ஆண்டுகளில் கோலி 10000 ரன்களை குவித்துள்ளார். இதில் 39 சதங்களும், 48 அரை சதங்களும் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 61.83. அதோடு 112 கேட்ச்களையும் அவர் பிடித்துள்ளார்.
அதோடு கடந்த பத்து ஆண்டுகளின் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் கோலி வென்றுள்ளார். இந்த பிரிவில் அஷ்வின், ஜோ ரூட், சங்கக்கரா, ஸ்டீவ் ஸ்மித், டிவில்லியர்ஸ் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
The incredible Virat Kohli wins the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade ?
? Most runs in the #ICCAwards period: 20,396
? Most hundreds: 66
? Most fifties: 94
?️ Highest average among players with 70+ innings: 56.97
? 2011 @cricketworldcup champion pic.twitter.com/lw0wTNlzGi
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!