அஜித்தின் ’வரலாறு’ படத்திற்குப் பிறகு ’வலிமை’ படத்தில் அம்மா, மகன் அன்பை வெளிப்படுத்தும் அழுத்தமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தினை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். 'நேர்கொண்ட பார்வை'-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ’வலிமை’ படத்தில் இணைந்தது. ஈஸ்வர மூர்த்தி’ என்ற பெயரில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
தற்போது, ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ள அஜித் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். ஜனவரிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50 வது பிறந்தநாளான மே 1 ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர கடுமையாக படக்குழு உழைத்து வருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ’வரலாறு’ அஜித் படங்களின் வரலாற்றில் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்தப்படம். மூன்று முகமாக அஜித் மூன்று கேரக்டர்களில் நடித்த, இப்படம் பெரிய வெற்றி பெற்றதோடு வசூலையும் குவித்தது. அஜித்துக்கு அம்மாவாக சுஜாதா, கனிகா நடித்து உருக வைத்தார்கள்.
அம்மா காட்சிகள் அழுத்தமாகவும் வலிமையாகவும் காட்சிப்படுத்தப்பட்டு கவனம் ஈர்த்தது. இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிக்கும் வலிமை படத்தில், அதேபோல அம்மா சென்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அதற்காகவே, படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனி பாடலை உருவாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?