மகாராஷ்டிரா மாநிலம் போரிவலியைச் சேர்ந்த 77 வயதான வர்த்தகர் ஒருவர் தனது மகன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், மகன் தனது கையெழுத்துக்களை மோசடியாக போட்டு தன் பெயரில் 2.5 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் போரிவலியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் 77 வயதான வணிகர் ஹஸ்திமல் ஜெயின் தனது மூன்று கடைகளை பார்வையிட்டபோது, அவை மூடப்பட்டிருப்பதைக் கண்டதனால் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது என்று போலீசார் தெரிவித்தனர். அவர் தனது மகன் பிரமோத்திடம் இதுபற்றி விசாரித்தபோது, கடைகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதால், அவரால் பராமரிப்பு செலவு செய்ய முடியவில்லை என்று கூறினார். மேலும் கேட்டபோது, வியாபாரத்தில் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக பிரமோத் கூறியதுடன், ரூ .2.5 கோடி மதிப்புள்ள சொத்தின் மீது கடன் வாங்கியதாகவும் கூறினார்.
உடனடியாக ஹஸ்திமல் வங்கி ஆவணங்களை சோதனை செய்தபோது, தனது கையொப்பத்தை மோசடியாக பதிவிட்டு ஹஸ்திமலின் பெயரில் கடன் வாங்கப்பட்டதனை அறிந்து அதிர்ச்சியடைந்தார். காவல்துறையினரின் கூறிய தகவலின்படி, இந்த கடன் 2019 ஆகஸ்ட் கடைசி வாரத்தில் வாங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நேரத்தில், ஹஸ்திமல் ஒரு மத விழாவில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்தான் சென்று செப்டம்பர் மாதம்தான் ஊர் திரும்பினார். "புகாரை விசாரித்த பின்னர், மோசடி செய்ததற்காக இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் குற்றத்தை பதிவு செய்துள்ளோம், இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை, தற்போது விசாரணை நடந்து வருகிறது" என்று போரிவாலி காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!