நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு 5 ஆவது முறையாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனவைருக்கும் நெகடிவ் என வந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. 34 வீரர்கள் உள்பட மொத்தம் 54 பேர் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். முதல் டி 20 போட்டி டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் தற்போது 14 நாட்கள் சுய தனிமையில் உள்ளனர். நியூசிலாந்து சென்றவுடன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 7 வீரர்களுக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து மற்ற வீரர்கள் அனைவரும் சுய தனிமையில் இருக்க வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் வெளியே செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதை மீறி சில வீரர்கள் வெளியே நடமாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நியூசிலாந்து சுகாதாரத் துறை பாகிஸ்தான் அணிக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் எச்சரிக்கையை மீறி பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் வெளியே நடமாடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நியூசிலாந்து நாட்டு சுகாதாரத் துறை பாகிஸ்தான் அணிக்கு கடைசி எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு 5 ஆவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தனிமையில் இருந்து வெளியேறி பயிற்சியை மேற்கொள்வார்கள் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Loading More post
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி