இலங்கை இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறித்தும், அப்போது நடந்த நிகழ்வுகளின் பின்னணி பற்றியும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு இடையிலான போரில் நடந்த மர்மங்கள் இன்னும் விலகாமல் இருந்து வருகின்றன. இறுதிக்கட்டபோரின்போது சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தற்போது நடந்து வரும் இலங்கை நாடாளுமன்றத் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. இறுதிகட்ட போரின்போது ராணுவத் தளபதியாக இருந்தவரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தற்போதைய எம்.பி.யுமான சரத் பொன்சேகா இதற்கு விளக்கம் அளித்தார்.
"இந்தக் குற்றச்சாட்டு பொய். இறுதி யுத்தத்தில் 5,000 முதல் 6,000 வரையிலான தமிழ் மக்கள் உயிரிழந்தனர். விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளில் பொதுமக்கள் கேடயமாக முன்னிறுத்தப்பட்டனர். அதன்காரணமாகவே இத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதுபோன்று பதுங்குக் குழிகளில் கேடயமாக முன்னிறுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நான் காப்பாற்றினேன். இறுதிக்கட்ட போரின்போது இது மாதிரியான சூழ்நிலையில் இருந்து இரண்டு நாட்களில் சுமார் 2,70,000 பொதுமக்களை இலங்கை ராணுவம் காப்பாற்றியது. இதில் 50,000 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து வனப்பகுதி வழியாக தப்பி வந்தவர்கள்.
வடக்கில் எந்தவொரு பொதுமக்களும் ராணுவத்தால் கொல்லப்படவில்லை. மக்களை யுத்தத்தின் மூலம் எங்கள் படை காப்பாற்றியது. இறுதிகட்ட போர் நடந்த காலகட்டத்தில் விடுதலைப்புலி இயக்கத்தில் 35 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 23,000 பேரை எனது தலைமையிலான ராணுவம் கொன்றது. மீதமுள்ளவர்களை உயிருடன் கைது செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர், கிளைமோர் குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டனர். தற்போதும் விடுதலைப் புலிகளின் நிழல்கள் இலங்கையில் செயல்பட்டு வருகின்றன. மீண்டும் இலங்கையில் பயங்கரவாதம் உருவாக இடமளிக்க முடியாது. தற்போது இலங்கை பாதுகாப்புப் பிரிவுகளை மறுசீரமைக்க வேண்டிய நேரம். பாதுகாப்பு பிரிவுகளை மறுசீரமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும். அதேபோல் ராணுவ கட்டமைப்பையும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
ஒரு நாட்டின் ராணுவ கட்டமைப்பு வலுவாக இருந்தால் அந்த நாட்டிற்கு அது கம்பீரமான ஒன்று. போருக்குப் பின் இலங்கை ராணுவம் மறுசீரமைக்கப்படவில்லை. 1955-ல் தயாரிக்கப்பட்ட பீரங்கிகளையே இலங்கை ராணுவம் இப்போதும் பயன்படுத்துகிறது" என்று பொன்செகா கூறினார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை நீக்கியுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் பேச்சு எழுந்தபோது, "எங்களுக்கு தமிழர்களுடனோ அல்லது முஸ்லிம்களுடனோ எந்த விரோதமும் இல்லை. ஆனால், பிரிவினைவாதத்தை அனுமதிக்க முடியாது, நாட்டை பிளவுபடுத்த முடியாது என்று நாங்கள் கருதுகிறோம்" என்று அமைச்சர் ஒருவர் கூறினார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!