கமலா ஹாரிஸ் வரிசையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு பெண் அமெரிக்க அரசுப் பதவியில் முக்கிய பொறுப்பில் அமரவிருக்கிறார். அவர் நீரா டாண்டன். அவர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் ஜனவரியில் பதவியேற்க இருக்கிறார். இவரின் அமைச்சரவை குறித்த விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய வம்சாவளிகள் அமெரிக்க உயர் அரசு பதவிகளில் பைடனால் பதவி பெற்று வருகின்றனர்.
கமலா ஹாரிஸ், விவேக் மூர்த்தி, அருண் மஜும்தார் மற்றும் மாலா அடிகா வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் நீரா டாண்டன். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் நீரா. இவரின் தாய் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் நீரா பிறந்தார். இவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே இவரின் பெற்றோர்கள் விவாகரத்து பெற்றனர்.
விவகாரத்தால் இரண்டு குழந்தைகளுடன் தவித்த நீராவின் தாய் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு வாழ்வு கொடுத்தது அமெரிக்க அரசுதான். தந்தை கைவிட்ட நிலையில் நீரா, அவரின் தாய் மற்றும் அவரின் சகோதரியின் பெரும்பாலான வாழ்க்கை அரசு அளிக்கும் உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை நம்பியே இருந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் குடும்ப பிரச்னைகளுக்கு மத்தியில் வளர்ந்த நீரா, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளார். மேலும், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பல கம்பெனிகளில் ஆலோசகராக பணிபுரிந்த அனுபவம் உண்டு. இப்படி ஏழ்மை நிலையில் இருந்து படிப்படியாக உயர்ந்த நீராவை உயர் பதவியில் ஏற்றி அழகு பார்க்க இருக்கிறார் பைடன்.
கடந்த அரசால் சரிந்த அமெரிக்காவின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கத் தொடங்கியுள்ள பைடன், அதன் ஒரு பகுதியாக பொருளாதர குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவில் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை பிரிவின் இயக்குநராக நீராவை நியமிக்க முடிவு செய்துள்ளார் பைடன். வெள்ளை மாளிகையில் உள்ள பொருளாதாரம் சார்ந்த அதிகாரம் மிக்க இந்தப் பதவியில் ஒரு பெண் தலைமைப் பொறுப்பை ஏற்க இருப்பது இதுவே முதல் முறை. இந்த வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு நீராவுக்கு கிடைத்துள்ளது.
தனக்கு வாய்ப்பு கிடைத்த உற்சாகம் தொடர்பாக பேசியுள்ள நீரா டாண்டன், "எனது தாய் மாயா இந்தியாவில் பிறந்தவர். அவர் ஒரு சிறந்த வாழ்க்கையைத் தொடர அமெரிக்கா வந்தார். ஆனால், எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, என் பெற்றோர் விவாகரத்து பெற்றனர், என் அம்மா இரண்டு குழந்தைகளுடன் மற்றும் வேலை இல்லாமல் தனியாக விடப்பட்டார். அந்த நேரத்தில் எனது தாய் முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று இந்தியாவுக்கு திரும்புவது. மற்றொன்று அமெரிக்க கனவுக்காக தொடர்ந்து போராடுவது. இரண்டாம் வாய்ப்பை தேர்ந்தெடுத்தார். அமெரிக்காவில் தங்கினார். கடினமான நேரங்களில் எங்களுக்கு அமெரிக்க கைகொடுத்தது.
இதனால் இதோ நான் இங்கு நிற்கிறேன். இந்த நேரத்தில் என் தாய்க்கும், எங்கள் கனவுகளுக்கு வாய்ப்பளித்த அமெரிக்காவுக்கும் நன்றி சொல்கிறேன். அரசு அளிக்கும் உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை நம்பியே வளர்ந்து வந்த எனக்கு, இப்போது அதுபோன்ற திட்டங்களை எளிய மக்களுக்கு உருவாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டதை எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்றே மகிழ்கிறேன். எளிய மக்களின் வலியை நான் நன்கு அறிவேன். எனவே, அவர்களை கண்ணியத்துடன் வாழ வைக்க என்னால் இயன்றதை முயல்வேன்" என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.
இதற்கிடையே, நீரா நியமனத்துக்கு அமெரிக்க குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது திடீர் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நிதிநிலை குழு தலைவர் பொறுப்புக்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதல் பெறவேண்டியது அவசியம். நீராவை இப்பதவியில் அமர்த்த குடியரசு கட்சி செனட்சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த காலத்தில் ட்ரம்ப்பை கடுமையான சொற்களால் நீரா விமர்சனம் செய்ததே இந்த எதிர்ப்புக்கு காரணம். ஆனால் பைடன் ஆதரவாக இருப்பதால் எப்படியும் நீரா பதவி பெறுவார் என்கின்றன அமெரிக்க ஊடகங்கள்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?