டெல்லியை நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகளை பேரிகார்டுகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ‘தலைநகரில் ஒன்று கூடுவோம்’ என்ற பெயரில் இரண்டு நாள் பேரணியை அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது. ஆனால் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக விவசாயிகளின் பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் விவசாயிகள் நேற்று ஹரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து ஊர்வலமாக தலைநகரை நோக்கி சென்றனர். எல்லைகளில் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் விவசாயிகள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து டெல்லிக்குள் நுழைய முயன்றனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தடுப்பு வழிகளை ஆற்றில் தூக்கி எறிந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் காவல்துறையினர் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பானது.
விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இருந்தாலும் விவசாயிகள் கலைந்து செல்லாமல் ஹரியானா எல்லையில் இரவு முழுவதும் காத்திருந்தனர். அதேநேரத்தில் ஹரியானா எல்லை இன்றும் மூடப்பட்டுள்ளது. மேலும் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தொடர்ச்சியாக அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து இன்றும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை நுழைய விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக விவசாயிகள் இன்றும் தடையை மீறி டெல்லிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தி வருகின்றனர். மேலும், கூட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை குண்டு வீசி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி