இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்கிறது.
2020-ஆம் ஆண்டில் ஏறத்தாழ சுமார் 8 மாதங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக களம் இறங்க உள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் கொரோனா தவிர்ப்பு நடவடிக்கையாக அரங்கில் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையில் பாதியளவு ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
விராட் கோலி தலைமையில் ஆடும் இந்திய அணி 1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி அணிந்து ஆடிய நீல நிற ஜெர்சியைப் போன்ற ஆடையையே அணிந்து ஆட உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து கோலி தலைமையிலான இந்திய அணி பவுலிங் செய்கிறது.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர். ஆரோன் பின்ச், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷானே, மார்கஸ் ஸ்டொய்னிஸ், அலெக்ஸ் கரே, மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஹேசல்வுட்
இந்திய அணி: ஷிகர் தவன், மயாங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது சமி, நவ்தீப் சைனி, பும்பா, சஹால்.
Loading More post
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!