சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட உறவினர் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தலீல் சந்த், ஷீத்தல், புஷ்பா ஆகிய 3 பேர் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஷீத்தலின் மனைவி ஜெயமாலா திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். இதையடுத்து டெல்லியில் பதுங்கியிருந்த ஜெயமாலாவை சென்னை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த ஜெயமாலாவின் சகோதரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயமாலாவுக்கு தலீத் சந்த் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்கள் 3 பேரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த, தலீத் சந்த் உறவினரான விஜயகுமாரை அழைத்தனர்.
இந்த நிலையில், விஜயகுமார் தனது வீட்டின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். விசாரணைக்கு அழைத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!