நடிகர் வடிவேலு சினிமா பட பாணியில் தேனி அருகே காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தேனி அருகேயுள்ள கூழையனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது நல்லசாமி குளம், 30 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் ஒருவரால் கிராம பயன்பாட்டிற்காக வழங்கபட்ட நிலத்தில் இந்த குளம் அமைந்துள்ளது. மழை காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் மழைநீரை இந்த குளத்தில் தேக்கி வைப்பதால் கூழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் தனிநபர் ஒருவர் இந்த குளம் தனக்கு சொந்தம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து தடுப்பணைகளை உடைத்து குளத்தில் உள்ள மண்ணை அள்ளி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரனமாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தங்களின் கிராமத்திற்கு சொந்தமான குளம் காணாமல் போய் விட்டதாகவும், அதனை கண்டுபிடித்துத் தருமாறும் வீர்பாண்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துனர். இந்த புகாரை பெற்ற காவல்துறையினர் அதிர்த்து போய் அந்த புகாரை அவர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி