ஐபிஎல் போட்டியின்போது நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலியை நேருக்கு நேராக முறைத்தது ஏன் என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. முன்னதாக, முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தபோது 13-வது ஓவரில் ஒரு சம்பவம் நடைபெற்றது. டேல் ஸ்டெய்ன் வீசிய அந்த ஓவரின் கடைசிப் பந்தை எக்ஸ்ட்ரா கவர் பகுதியில் நின்றுகொண்டிருந்த கோலியிடம் அடித்தார் சூர்யகுமார். பந்தைப் பிடித்த கோலி, நேராக சூர்யகுமாரை நோக்கி நடந்து வந்தார். இதனால் தடுமாற்றம் அடையாத சூர்யகுமார், கோலியைப் பார்த்தபடி முறைத்தார். இந்தச் சம்பவம் அப்போது பேசு பொருளானது.
இப்போது அந்தச் சம்பவம் குறித்து இப்போது சூர்யகுமார் யாதவ் வெளிப்படையாக பேசியுள்ளார், அதில் " அந்தப் போட்டியில் ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என்கிற அழுத்தத்தில் இருந்தேன். அந்த ஆட்டத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி விடுவோம். எனவே ரன்கள் எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன்" என்றார்.
மேலும் "விராட் கோலியை முறைத்த அந்தச் சம்பவம் இருவர் தரப்பிலும் இயல்பாக நடைபெற்றது. நீண்ட நாளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் விராட் கோலியை பெரிய ஊக்கமாகக் கருதுகிறேன். அவருடைய உற்சாகம், ஆதிக்கம் செலுத்தும் பாங்கு என எல்லாவற்றையும் ஆடுகளத்தில் காண முடியும், அது எந்த வகை கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும். ஆட்டம் முடிந்த பிறகு அச்சம்பவத்தைக் குறிப்பிட்டு இருவரும் சிரித்துக்கொண்டோம். அந்த ஆட்டத்தில் நான் நன்றாக விளையாடியதற்காக கோலி என்னை வாழ்த்தினார்" என்றார் சூர்யகுமார் யாதவ்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?