நடிகர் அருண் விஜய் தனது 43 வது பிறந்தநாளை ஆதரவற்றக் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜயகுமாரின் மகனும் நடிகருமான அருண் விஜய் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக இருந்து வருகிறார். முறை மாப்பிள்ளை, பிரியம், காத்திருந்தக் காதல், துள்ளித் திரிந்த காலம், வேதா, பாண்டவர் பூமி என 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவரை மாஞ்சா வேலு, தடையறக் காக்க, என்னை அறிந்தால் குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் உள்ளிட்டப் படங்கள்தான் அவரை முன்னணி நடிகராக்கியது.
எப்போதும் பிட்னஸில் விழிப்புணர்வோடு இருக்கும் அருண் விஜய் உடலை மட்டும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவில்லை. மனதையும்தான். ஆரம்பக் காலக்கட்டங்களில் தொடர் தோல்விகளைக் கொடுத்தும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இழக்காமல் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பவர்.
இந்நிலையில், இன்று தனது 43 வது பிறந்தநாளைக் ஆதரவற்றக் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஆதரவற்றக் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைப் பார்த்தது எனது பிறந்தநாளுக்கு நான் விரும்பும் சிறந்த தொடக்கமாகும். இவர்களுடன் கொண்டாடியது என் இதயத்தை முழுமையாக்குகிறது. உங்கள் அருமையான வாழ்த்துகள் மற்றும் ஆசிர்வாதங்களுக்கு நன்றி” என்று ஆதரவற்றக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பர்கிந்துள்ளார்.
Loading More post
சென்னை மற்றும் புறநகரில் கடுமையான பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!