புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த ரஜினி

Does-Rajini-kanth-helps-Thavasi

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உதவி நடிகர் தவசிக்கு ரஜினிகாந்த் உதவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்தவர் தவசி. சமீப காலமாக உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர், திரைத்துறையினரோ, அரசோ தனக்கு உதவிக்கரம் நீட்ட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தார்.

image


Advertisement

இந்நிலையில், தவசியை தனது மருத்துவமனையில் அனுமதித்து இலவச சிகிச்சையும் அளித்து பேருதவி புரிந்திருக்கிறார், திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன். அவரைத் தொடர்ந்து நடிகர்களான சூரி, விஜய் சேதுபதி மற்றும் சிவ கார்த்திகேயன் ஆகியோர் அவருக்கு உதவிகள் செய்தனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் தவசிக்கு மருத்துவ உதவிசெய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் அலுவலகத்தில் இருந்து பேசிய அவரது மேலாளர், நடிகர் ரஜினிகாந்த் கூறியதன் அடிப்படையில் தவசியின் உடல்நலத்தை குறித்து விசாரித்ததாகவும், தேவையான உதவிகளை ரஜினி சார் கண்டிப்பாக செய்வார் என தவசியின் குடும்பத்தாரிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement