ஆடையை சரிசெய்வதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: புகைப்படக்காரருக்கு சிறை

Mumbai--Photographer-molests-teenager-during--look-test---sentenced-to-one-year-imprisonment

மும்பையில் 2015 ஆம் ஆண்டில் 'லுக் டெஸ்ட்' என்ற பெயரில் ஒரு  இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 43 வயது நாகேஸ்வர் ராவ் என்ற புகைப்படக்காரருக்கு நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.


Advertisement

image

மார்ச் 2, 2015 அன்று அந்த இளம்பெண்  தனது தாய் மற்றும் சகோதரருடன் குற்றம் சாட்டப்பட்டவரின் ஸ்டுடியோவுக்கு ஆடிஷனுக்கு சென்றார். அப்போது அந்த புகைப்படக்காரர் சிறுமியின் சில புகைப்படங்களை மட்டும் எடுத்து, மறுநாள் மீண்டும் வரும்படி அழைத்துள்ளார். மறுநாள் அவர் தனக்கு அரைகுறை ஆடைகளை கொடுத்ததாகவும், தன்னுடைய ஆடைகளை சரிசெய்யும் சாக்குப்போக்கில் அவர் தன்னை  தகாத முறையில் தொட்டதாகவும் கூறியுள்ளார். நடிப்புத்துறையில் இது சகஜமானவை என்றும் அவர் கூறியுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு, அப்பெண் அழுதுகொண்டே அறையிலிருந்து வெளியே வந்து, தனது குடும்ப உறுப்பினர்களின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு வந்தார், அவர்கள் இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தனர்.


Advertisement

நடிப்புத் துறையில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவானவை என்று குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த பதில் அவரது தொடுதல் தற்செயலானது அல்ல, ஆனால் பாலியல் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்பதைக் குறிக்கிறது என்று நீதிமன்றம் கூறியது. போக்ஸோ சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இவரை  நீதிமன்றம் விடுவித்த போதிலும், சம்பவம் நடந்த நேரத்தில் அந்தபெண் மைனர் என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதால், அவர் ஐபிசி கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. விசாரணையின் போது பாதிக்கப்பட்ட இளம்பெண்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டினார். சிறுமியின் சாட்சியம் நம்பகமானதாக உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement