பிரபல வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜி காலமானார்!

Legendary-Actor-Soumitra-Chatterjee-Dies-At-85-In-Kolkata
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த பிரபல வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர் இன்று மதியம் காலமானார்!
 
வங்காளத்தில் மிகவும் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சௌமித்ர சாட்டர்ஜி. சத்யஜித் ரேவ், மிருணாள் சென் உள்ளிட்ட பல பிரபல இயக்குநர்களின் திரைப்படங்களில் சாட்டர்ஜி நடித்துள்ளார். கடைசியாகக் கடந்த ஆண்டு வெளியான 'சன்ஜ்பாதி' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
 
தற்போது 85 வயதாகும் சாட்டர்ஜி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதோடு சேர்த்து பத்ம பூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளையும் வென்றவர்.
 
கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியன்று கொரோனா அறிகுறிகளுடன் கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சௌமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
 
இந்நிலையில் இன்று மதியம் 12.15 மணியளவில் சௌமித்ர சாட்டர்ஜியின் உயிர் பிரிந்தது. இதையடுத்து மாநில தலைமைச் செயலாளர், கொல்கத்தா காவல்துறை ஆணையர் மருத்துவமனை விரைந்துள்ளனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனை வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement