எதிர்பார்ப்புடன் வெளியானது சிம்புவின் "ஈஸ்வரன்" டீசர்

Released-Simbu-EeswaranTeaser

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு கவனம் செலுத்தி வந்தார். ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டு, திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.


Advertisement

பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வந்தார்கள். தற்போது 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .


Advertisement

இந்நிலையில் இன்று அதிகாலை 4.32 மணியளவில் ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு.

பொங்கல் வெளியீடு என்று ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அறிவித்துவிட்டதால், இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக களமிறங்கவுள்ளது படக்குழு. 'ஈஸ்வரன்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement