உடனடியாக கடன் தருவதாகக் கூறி குறுந்தகவல்கள் அனுப்பும் செல்போன் ஆப்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
செல்போன் ஆப்கள் சில, உடனடியாக கடன் தருவதாகக் கூறி குறுந்தகவல்களை அனுப்புகின்றன. அதை நம்பி சிறிய தொகைதானே என்று கடன் வாங்க நினைக்கும், நபர்களுக்கு உதாரணமாக ரூ.5000 கடன் தொகை கேட்டால், கடன் அளிக்க செயல்பாட்டுக் கட்டணம் என்று ரூ.1,500 பிடித்தம் செய்து வெறும் ரூ.3500 வரவு வைக்கப்படுகிறது.
அதனை திரும்ப செலுத்த தாமதமாகும் பட்சத்தில், வட்டி, வட்டிக்கு வட்டி என்று கடன் வாங்கியவரை செயலிகள் மிரட்டத் தொடங்குகின்றன. அதுமட்டுமல்ல, கடன் வாங்கியவரின் செல்போன் இருக்கும் தொடர்பு எண்களையும் தொடர்பு கொண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, செல்போன் ஆப்களிடம் கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்துகிறார்கள்.
இதையும் படிக்கலாம் நெருங்கும் தீபாவளி...உங்கள் சுயமரியாதைக்கு வேட்டு வைக்கும் "லோன் ஆப்" !
உடனடி லோன் தருவதாக கூறி உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் போலி மொபைல் போன் அப்ளிகேஷன்கள்..,போலி மொபைல் போன் லோன் அப்ளிகேஷன்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது.
உடனடி லோன் தருவதாக கூறி உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் போலி மொபைல் போன் அப்ளிகேஷன்கள்..,
போலி மொபைல் போன் லோன் அப்ளிகேஷன்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது..,#Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs pic.twitter.com/ca1n86BcRN — virudhunagar district police (@Vnr_Police) November 12, 2020
இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், "உடனடி லோன் தருவதாகக் கூறி உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் போலி மொபைல் போன் அப்ளிகேஷன்கள், போலி மொபைல் போன் லோன் அப்ளிகேஷன்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!