இன்சூரன்ஸ் மோசடிக்காக பலருக்கு தேவையற்ற கருப்பை நீக்கம்: மருத்துவருக்கு 465 ஆண்டு சிறை

Virginia-gynecologist-is-facing-a-465-year-prison-sentence-after-performing-unnecessary-hysterectomies-on-patients-to-defraud-insurance-companies

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு மகளிர் மருத்துவ நிபுணர், தனது நோயாளிகளுக்கு தேவையற்ற அறுவை சிகிச்சைகள் செய்த குற்றத்திற்காக 465 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.


Advertisement

image

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம், செசபீக்கைச் சேர்ந்த டாக்டர் ஜாவித் பெர்வைஸ் தனது நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியாக தேவையற்ற அறுவை சிகிச்சைகள் செய்வதாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பல வழக்குகள் கருப்பை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பானவை.


Advertisement

நீதிமன்ற பதிவுகளின்படி பெர்வைஸ் தனியார் மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை அறுவை சிகிச்சைக்கு பெற்றுள்ளார். கர்ப்பிணி நோயாளிகளை பிரசவ காலத்துக்கு முன்கூட்டியே தூண்டி அறுவை சிகிச்சை செய்துள்ளார்  மற்றும் நிரந்தர கருத்தடைகளுக்கு 30 நாள் காத்திருப்பு காலங்களை மீறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோய் வராமல் தடுக்க அறுவை சிகிச்சை அவசியம் எனக்கூறி அறுவை சிகிச்சை செய்து தனது நோயாளிகளிடம் பணம் வசூலித்துள்ளார் என்றும் கூறியுள்ளது.

பெர்வைஸ் கடந்த 10 ஆண்டு காலத்தில், தன்னிடம் சிகிச்சை பெற்ற  41.26% நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார், ஆனால் ஒரு சராசரி மருத்துவர் வெறும் 7.63% நோயாளிகளுக்கு  மட்டுமே அறுவை சிகிச்சைகள் செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மருத்துவர்கள், மக்களின் நம்பிக்கைக்குரிய இடத்தில் உள்ளனர், தங்களின் நோயாளிகளுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால் பெர்வைஸ் தேவையற்ற மருத்துவ நடைமுறைகள் மூலம்  தனது நோயாளிகளுக்கு நீடித்த சிக்கல்கள், வலி மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், நோயாளிகளின் எதிர்கால வாழ்க்கையையும் சிதைத்துள்ளார்" என்று நீதிமன்ற ஆணையில் கூறப்பட்டுள்ளது


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement