ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்வான் விண்வெளி ஏவு தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி- சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
3.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த இந்த ராக்கெட் 10 நிமிட தாமதமாக 3.12க்கு விண்ணில் ஏவப்பட்டது.
கொரோனா பாதிப்புகளுக்கு இடையே இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி- சி 49, பத்து செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒன்று இ.ஓ.எஸ்-01 என்ற செயற்கைக்கோள். இது அனைத்துச்சூழலிலும் படங்கள் எடுக்கும் சின்தடிக் அபர்ச்சர் ரேடார் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதுதவிர வணிக ரீதியாக 9 பன்னாட்டு செயற்கைக் கோள்களையும் சுமந்து செல்கிறது. அமெரிக்கா, லக்ஷம்பர்க்கின் தலா 4, லூதியானாவின் ஒரு செயற்கைக் கோள்களையும் இது கொண்டுள்ளது.
WATCH ISRO launches EOS01 and 9 customer satellites from Satish Dhawan Space Centre in Sriharikota pic.twitter.com/2ifOeAYIpx— ANI (@ANI) November 7, 2020
பி.எஸ்.எல்.வி வரிசையில் 51வது ராக்கெட்டாக இந்த பி.எஸ்.எல்.வி சி-49 ஐ இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டனவா என்று 15 நிமிடங்களில் தெரியவரும் என விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. முதலில் இந்தியாவின் இ.ஓ.எஸ்-01 அதன் பாதையில் நிலைநிறுத்தப்படும் என்றும், மற்றவை அடுத்தடுத்து நிலைநிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?