நாடு முழுவதும் பொது விநியோக முறையில், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால், கடந்த 2013ம் ஆண்டிலிருந்து இதுவரை 4.39 கோடி போலி ரேசன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொது விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த, தொழில்நுட்ப ரீதியிலான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. பயனாளிகளுக்கு ஆதார் எண்கள் இணைக்கப்பட்ட, டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் போலி ரேசன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டு ரத்து செய்யப்பட்டன. 2013ம் ஆண்டு முதல் 2020 வரை 4.39 கோடி போலி ரேசன் அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நீக்கியுள்ளன. நேர்மையான பயனாளிகளுக்கு பழைய ரேசன் கார்டுகளில் பெயரை நீக்கி, புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 81.35 கோடி பேர், ரேசன் கடைகள் மூலம் மானிய விலை உணவு தானியங்களை பெற்று வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை நாட்டின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3இல் 2 பங்கு. தற்போது 80 கோடிக்கும் அதிகமானோர், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிலோவுக்கு ரூ.3, 2, 1 என்ற மானிய விலையில் மாதந்தோறும் உணவு தானியங்களை பெற்று வருகின்றனர்.
Loading More post
சென்னை மற்றும் புறநகரில் கடுமையான பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!