ஆட்டிச நிலைபாடுடைய மகனை தனது வயிற்றுடன் கட்டிக்கொண்டு தந்தை ஒருவர் விளையாட்டு மைதானத்தில் மற்ற சிறுவர்களுடன் பந்து விளையாடி மகிழ வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது, தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது, சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது, பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது, வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது,தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது, காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, வலியை உணராமல் இருப்பது போன்றவையே ஆட்டிச நிலைபாடாகும். இதனால், பெரும்பாலான ஆட்டிச நிலைபாடுடைய த குழந்தைகள் கற்றல், விளையாட்டு திறன்கள் இன்றி வீடுகளிலேயே வைத்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
This video warms my soul ???? pic.twitter.com/4wMddUqkZh — The Feel Good Page ❤️ (@akkitwts) November 6, 2020
‘the feel good page’ என்ற ட்விட்டர் பக்கத்தில், அப்படி ஆட்டிச நிலைபாடுடைய தனது மகன் விளையாடி மகிழவேண்டும் என்று நினைத்த தந்தை ஒருவர் மகனை வயிற்றோடு கட்டிகொண்டு பந்து விளையாடுகிறார். விளையாட்டுத் திடலில் பந்து விளையாடும் சிறுவர்களுடன் ஆட்டிச நிலைபாடுடைய சிறுவனின் தந்தையும் சிறுவனை விளையாட வைத்து மகிழ வைக்கிறார். பந்தைப் பார்த்ததும் சிறுவன் முகத்தில் தவழும் புன்னகையும், அவனுக்காக தந்தையும் வயிற்றில் கட்டிக்கொண்டு நகருவதும் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.
Loading More post
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்