தாம்பரத்தில் தனியார் மதுபான பாரில் சூதாட்டம் ஆடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். 2லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம், 20 சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூரில், தனியார் உணவு விடுதி மற்றும் மதுபான பார் இயங்கி வருகிறது. இதில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தாம்பரம் உளவுத்துறை போலீசார் சுரேஷ் மற்றும் மதுசூதனன், ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் தாம்பரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆல்பின் ராஜ் தலைமையிலான போலீசார் மதுபானபாரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அதன் பேரில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மணி, ரங்கா, ரவிகுமார், பிரவின், கோதண்டன், வெங்கட் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 2.60 லட்சம் ரூபாய் பணம், 20 சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவலை கொடுத்த உளவுத்துறை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்