சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மதுபோதையில் தகராறு செய்ததாக திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கோடம்பாக்கத்தில் வசிக்கும் ஸ்ரீராம் என்பவர் நட்சத்திர ஓட்டலில் மதுகுடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் இருந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா, ஸ்ரீராமை பார்த்து மது வாங்கி வரும்படி தகராறு செய்து அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சூர்யா மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதே போன்று, திருச்சி சிவாவின் மகன் சூர்யாவும் புகார் கொடுத்துள்ளார். அதில், பிறந்த நாள் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது, தனது நண்பரின் கையில் இருந்த மதுபாட்டிலை ஸ்ரீராம் பிடுங்கியதாகவும், அதை தட்டிக் கேட்டதும் கத்தியை கொண்டு தன்னை மிரட்டியதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.
இரண்டு புகார்களையும் பெற்றுக் கொண்ட தேனாம்பேட்டை காவல்துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகாருக்கு ஆளான சூர்யா, திமுக எம்.பி. திருச்சி சிவாவை விட்டு பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!