கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 72.
மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 13ஆம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணுவுக்கு 90 சதவிகிதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை கூறியிருந்தது.
உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது.
அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். வேளாண் துறையில் முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றிவந்தவர் அமைச்சர் துரைக்கண்ணு என ஆளுநர் கூறியுள்ளார். துரைக்கண்ணுவின் மறைவு அதிமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என ஆளுநர் இரங்கல் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
Loading More post
மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா: வீடியோ!
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
"நான் எப்போதும் டெலாவேர் நகரின் மகன்!" - சொந்த ஊரில் உணர்ச்சிவசப்பட்ட பைடன்
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு