ஊரடங்கு நாட்களில் மெக்கானிக் பயிற்சி: ஈரோட்டில் அசத்தும் ஆறாம் வகுப்பு மாணவன்

sixth-grade-student-rocks-in-two-Wheeler-Mechanic-Training-in-erode

ஈரோடு நகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் காஞ்சிக்கோயில். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் - சுசீலா தம்பதியின் மகன் ஹரீஷ்ராம், ஊரடங்கு நாட்களில் பள்ளிகள் மூடப்பட்டதால், ஒரு நாளும் தவறாமல் உள்ளூர் மெக்கானிக் கடைக்குச் சென்றுவருகிறான். அதிலென்ன ஆச்சரியம்?


Advertisement

ஆம்... இருக்கிறது. டிவிஎஸ் எக்ஸல் வண்டி என்ஜினை பிரித்து கோர்க்கும் அளவுக்கு பயிற்சியில் தேர்ந்திருக்கிறான் சிறுவன் ஹரீஷ்ராம். நசியனூரில் உள்ள பாரதி கல்வி நிலையத்தில் ஆறாம் வகுப்புப் படிக்கிறான். கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் ஆர்வத்தில் மெக்கானிக் பயிற்சி பெற்றிருக்கிறான்.

விழாக்கள்... விசேஷங்கள்... விலையேறும் தங்கம்.. இன்றைய விலை நிலவரம்..!


Advertisement

image

மெக்கானிக் கடை முதலாளி மாது, சிறுவன் ஹரீஷ்ராமுக்காக சின்ன டிவிஎஸ் வண்டியை டிசைன் செய்துகொடுத்திருக்கிறார். அவன் உயரத்தில்தான் இருக்கிறது. வண்டியை ஸ்டேன்ட் செய்து நிறுத்துவதற்குக்கூட சிரமப்படுகிறான் இந்தச் சிறுவன். ஆனால் இருசக்கர வாகனங்களின் பழுதுநீக்குவதில் அவன் அசத்திவருகிறான். அவ்வப்போது பள்ளியில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளையும் தவறவிடுவதில்லை.

“கொஞ்சம் பொறுங்க, காதலன் வருகிறார்” - தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்


Advertisement

image

"நானாகத்தான் மெக்கானிக் பயிற்சிக்குச் சென்றேன். காலையில் போய்ட்டு மாலையில் வீட்டுக்கு வருவேன். நேரம் கிடைக்கும்போது மதியம் அல்லது மாலையில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வேன். பள்ளி திறந்ததும் மெக்கானிக் கடைக்குச் செல்வதை நிறுத்திவிடுவேன். எனக்கு டூவீலர் ரிப்பேர் பயிற்சிகளைக் கற்றுக்கொடுக்கிறார் கடை முதலாளி. எதிர்காலத்தில் நான் மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆவேன்" என்கிறான் மழலை மாறாத மொழியில் ஹரீஷ்ராம்.

image

காஞ்சிக்கோயில் கிராமத்துத் தெருக்களில் சிறுவன் ஓட்டிச்செல்லும் டிவிஎஸ் வண்டி ரொம்பவும் பிரபலமாக இருக்கிறது. இங்கு எல்லோருக்கும் அவன் செல்லப்பிள்ளையாக இருக்கிறான். ஒரு நாளைக்கு ஹரீஷுக்கு 50 ரூபாய் கிடைக்கிறது. அந்தப் பணத்தைச் சேமித்துவைத்து வங்கியில் செலுத்துகிறான். அவ்வப்போது குடும்பச் செலவுக்கும் கொடுத்து உதவுகிறாான்.

சிறுவனின் தந்தை ரொட்டி கம்பெனியில் வேலை செய்கிறார். அவனுக்கு ஒரு அக்கா. இதுவரை 2 ஆயிரம் ரூபாய் சேமித்துவைத்திருக்கிறான் சிறுவன் ஹரீஷ்ராம்.

தக்காளி இருந்தா போதும்... உங்க முகம் இனி பளபளக்கும்.! இந்த டிப்ஸ படிங்க..

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement