பிளே ஆஃப்-ஐ உறுதி செய்து விட்ட மும்பை இண்டியன்ஸ், ஹாட்ரிக் தோல்விகளால் துவண்டுள்ள டெல்லி. இவ்விரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பார்க்கலாம்.
பிளே ஆஃப்-க்குள் முதல் அணியாக நுழைந்து விட்ட உற்சாகத்தில் உள்ளது மும்பை இண்டியன்ஸ். பேட்டிங் பவுலிங் இரண்டிலும் சமபலம் பொருந்தியுள்ள மும்பை அணி, வல்லுநர்களால் கணிக்கப்பட்ட கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக வலம் வருகிறது. பேட்டிங் மேல்வரிசையில் டிகாக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தூண்களாக உள்ளனர்.
கேப்டன் பொல்லார்டு, குருனால் பாண்ட்யா, சவுரப் திவாரி ஆகியோர் மத்திய கள வீரர்களாக பேட்டிங்கிற்கு வலுசேர்க்கின்றனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் யார்க்கர் மன்னன் பும்ரா, எதிரணியினருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. போல்ட், பேட்டின்சன் ஆகியோர் சராசரியான பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். ராகுல் சாஹரின் சுழற்பந்துகள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அஸ்திரங்களாக வலுசேர்க்கின்றன.
சீசனில் ஆதிக்கம் மிகுந்த அணிகளில் ஒன்றாக வலம் வந்த டெல்லி அணி அடுத்தடுத்த 3 தோல்விகளால் துவண்டுள்ளது. பேட்டிங்கில் அனுபவ வீரர் தவன் சீரான ஃபார்மில் இல்லை. ரஹானே ஃபார்மை இழந்துள்ளார்.
கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் ஆறுதலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மத்திய கள வீரர்களான ஸ்டாய்னிஸும், ஹெட்மெய்ரும் அதிரடி காட்டத் தவறி வருவது அணிக்கு பெரும் பின்னடைவாகவே உள்ளது.
அக்ஸர் படேல் பந்து வீச்சில் ஜொலித்தாலும், பேட்டிங்கில் நிலையான ஃபார்மை வெளிப்படுத்துவதில்லை. பந்து வீச்சில் ஆண்ட்ரிச் நாட்ஜ் மட்டுமே வலுவாக உள்ளார். ரபாடா துல்லிய யார்க்கர்கள் வீசும் ஃபார்மை இழந்துள்ளது அணிக்கு கெட்ட செய்தியாக உள்ளது. ரவிச்சந்திரனின் கேரம் சுழல்கள் பக்கபலமாக உள்ளன. 5 ஆவது பந்து வீச்சாளரான தேஷ் பாண்டே அதிகளவில் ரன்களை வாரி இறைப்பது அணிக்கு பின்னடைவாகவே உள்ளது.
அழுத்தமின்றி களமிறங்கவுள்ள மும்பையின் பாய்ச்சலை, ஹாட்ரிக் தோல்விகளில் இருந்து மீளும் வேட்கையில் உள்ள டெல்லி அணி சமாளிக்குமா என்பதே இன்றைய போட்டியின் சுவாரஸ்யம்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?