வால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்!

cow-delivery-Tailless-calf-in-ambur

ஆம்பூர் அருகே பசுமாடு ஒன்று வால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.


Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம், சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

image


Advertisement

இந்நிலையில் அவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று சினையாக இருந்து வந்தது. அதையடுத்து இன்று வால் இல்லாமல் கன்று குட்டி ஒன்றை அந்த பசுமாடு ஈன்றுள்ளது. இதுகுறித்து ஆம்பூர் கால்நடை மருத்துவர் வினு டேவிட் கூறுகையில், “இது போன்று எப்போதாவது நடக்கும். இதற்கு பெயர் (ANURY) என்று அழைப்பார்கள். தற்போது வால் இல்லாமல் பிறந்துள்ள இந்த கன்று குட்டிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த கன்று குட்டியின் கர்ப்பப்பை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுமே நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement