தேனியில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை - நகரின் பிரதான பகுதியில் நடந்ததால் மக்கள் பீதி!

The-brother-who-overcame-the-corona-and-went-to-see

தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய தனது அண்ணனை பார்க்கச் சென்ற தம்பியின் வீட்டில் பணம் நகை கொள்ளை போனது.


Advertisement

 image

தேனியின் முக்கிய பகுதியான என்.ஆர்.டி நகரில் குடியிருந்து வருபவர் சீனிவாசராகவன். பிரபல தொழிலதிபரான இவர் நேற்று மாலை கோயம்புத்தூரில் வசிக்கும் தனது அண்ணனை பார்க்கச் சென்றுள்ளார். கொரோனோ நோயால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய தனது அண்ணனை பார்ப்பதற்காக தனது குடும்பத்தாருடன் அவர் சென்றுள்ளார்.


Advertisement

image
இந்நிலையில், இன்று காலை சீனிவாசராகவன் வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள், வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோ, லாக்கர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக வீட்டின் உரிமையாளர் சீனிவாசராகவனுக்கு தகவல் அளித்தனர்.

image

இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தேனி டிஎஸ்பி முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டுக்குச் சென்று விசாரித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் முதல் கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

சீனிவாசராகவன் வெளியூரிலிருந்து வந்த பின்னர்தான் வீட்டில் எவ்வளவு மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது என முழுமையாக மதிப்பீடு தெரியவரும். தேனி நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் என்.ஆர்.டி நகரில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் தேனி நகர் முழுவதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement