மலையாளத்தில் பெரும் வெற்றிப்பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவின் அஜித் என்றழைக்கப்படுகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ கட்சியை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார் பவன் கல்யாண்.
ஆனால், சிரஞ்சீவி கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தபோது, அதில் மாற்றுக்கருத்து ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு ’ஜன சேனா’ என்ற கட்சியை ஏற்படுத்தி முழுநேர அரசியல்வாதியாய் மாறினார். ஆனால், அவர் நினைத்தது போல் அரசியல் வெற்றிகரமாக அமையவில்லை. அதனால், மீண்டும் தற்போது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார்.
அதற்கடுத்ததாக, இந்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி பிரித்வி ராஜ் நடிப்பில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மறைந்த இயக்குநர் சச்சி இயக்கிய ’அய்யப்பனும் கோஷியும்’ கேரளாவில் வெற்றியடைந்ததோடு விமர்சன ரீதியாக தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க, சாகர் கே சந்திரா இயக்க தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் பவன் கல்யணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி உடனடியாக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கெனவே, சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ’பிரேமம்’ மூலம்தான் முன்னணி நடிகையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி