ஒடிசாவில் 9 வயது பெண் குழந்தையை ரூ.15 ஆயிரத்துக்கு குழந்தையில்லாத தம்பதிக்கு விற்ற பெண்ணை போலீஸார் கைதுசெய்துள்ளானர்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதைத் தாண்டிய பெண் ஒருவர் பிறந்து 9 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை, குழந்தையில்லாத ஒரு தம்பதியருக்கு விற்றுவிட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவிற்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று விசாரித்ததில், தினசரிக்கூலிக்கு வேலை செய்துவந்த அந்தப் பெண்ணுக்கு ஊரடங்கு காரணமாக வேலை எதுவும் இல்லை எனவும், ஏற்கெனவே அவருக்கு 5 குழந்தைகள் இருப்பதாகவும், சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் கணவர் விட்டுச் சென்றுவிட்டதாகவும் அந்தப் பெண்ணின் தந்தைக் கூறியிருக்கிறார்.
அவர்களுக்கு கிடைத்த தகவல்படி, குழந்தையை வாங்கிச் சென்ற குடும்பத்தை சோதனைசெய்தபோது, அவர்களிடம் குழந்தை இருப்பது தெரியவந்திருக்கிறது. விசாரித்ததில், அவர்கள் தத்தெடுத்து வந்ததாகக் கூறியிருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் சட்டப்பூர்வமான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் குழந்தையை கைப்பற்றிய அதிகாரிகள் தற்போது மாவட்ட குழந்தைகள் நலவாரியத்தில் குழந்தையை ஒப்படைத்துள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் சாகர் இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு கொடுத்த தகவலில் தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தையை விற்ற வாங்கியக் குற்றத்திற்காக குழந்தையின் தாய் மற்றும் அந்தத் தம்பதியினரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!