பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய மர்ம நபர்... கருப்பு வர்ணம் பூசிய போலீசார்..!

Unidentified-people-poured-saffron-paint-on-the-statue-of-Periyar

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்


Advertisement

 

image


Advertisement


திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரியார் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை மீது நள்ளிரவு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவதிப்பு செய்துள்ளனர். இதைக்கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் காவல்நிலைய துணை கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் 30க்கும் மேற்பட்ட ரெட்டியார் சத்திரம் போலீசார் மின் விளக்குகளை அணைத்து இரவோடு இரவாக காவிசாயம் அழிக்கப்பட்டு கருப்பு வர்ணம் பூசி உள்ளனர்.

 


Advertisement

image


இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி டிஎஸ்பி அசோகனிடம் வலியுறுத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement