துபாய் பொதுப் போக்குவரத்தில் முக அங்கீகார தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு துபாயில் நடைபெறவிருக்கும் உலகளாவிய எக்ஸ்போ கண்காட்சியை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக அங்கீகார தொழில்நுட்பமும் ஒன்று என்று துபாயின் போக்குவரத்து பாதுகாப்பு துறை இயக்குநர் ஒபைத் அல்-ஹத்பூ தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் "ஸ்மார்ட் சிட்டி" ஆவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் முக அங்கீகார தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. விரைவில் இந்த தொழில்நுட்பம் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் எதிர்வரும் மாதங்களில் நிறுவப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம், சந்தேகத்திற்குரிய நபர்களும் காவல்துறையால் தேடப்படுவோரும் எளிதில் அடையாளம் காணப்படுவர் என்று அதிகாரிகள் கூறினர். இதற்காக அமெரிக்காவில் ஒரு சிறப்பு போலீஸ் பிரிவு பயிற்சி பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு சந்தேக நபரை அடையாளம் காண குறைந்தது ஐந்து மணிநேரம் ஆனது என்றும் முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் ஒரு நிமிடத்திற்குள் அடையாளம் காணமுடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகளாவிய எக்ஸ்போ கண்காட்சி, புத்தாக்கச் சிந்தனையையும் அனைத்துலக ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
துபாயில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் கிட்டத்தட்ட 190 நாடுகள் பங்கேற்கவுள்ளன. சுமார் 15 மில்லியன் வருகையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
Loading More post
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
பாமக விரும்பும் 23 தொகுதிகள் எவை? - அதிமுகவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு: ஆன்லைன் மூலம் கையெழுத்தான ஒப்பந்தம்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?