பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே செல்லாது என்றே தோன்றுகிறது என நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற நூலிழையில் வாய்ப்பு உள்ளது. எனவே எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. சென்னை அணி, இன்றைய போட்டியிலும் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் நடப்பு தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகள் பட்டியலில் முதல் அணியாக வெளியேறிவிடும்.
இந்நிலையில் இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் "ஸ்டார் ஸ்போர்ட்ஸே" தொலைக்காட்சியில் பேசும்போது "நான் சொல்வது சிஎஸ்கேவுக்கு காயம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. இந்த ஐபிஎல்லில் அவர்கள்தான் மோசமான அணியாக இருக்கிறார்கள். அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பு ஏற்கெனவே பறிபோய்விட்டதாகவே உணர்கிறேன்" என்றார்
மேலும் "அவர்களுடைய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஏற்கெனவே சொன்னது போலதான். இந்த அணி தொடர்ந்து மூன்றாவது சீசனாக களமிறங்குகிறது. அந்த அணிக்கு வயதாகிவிட்டது. சென்னை அணியில் ஏராளமான மேட்ச் வின்னர்கள் இருந்தாலும் ஏனோ யாரும் இந்தாண்டு சரியான பார்முக்கு வர முடியவில்லை. டூப்ளசிஸ், தீபக் சஹார் தவிர யாரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை" என்றார் ஸ்காட் ஸ்டைரிஸ்.
Loading More post
”ரூ12,400 கோடிக்கு புதிய திட்டங்கள்” - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி புகழாரம்!
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
ஓடிடி படங்களை 13+ ,16+, அடல்ட் என வகைப்படுத்த வேண்டும்: மத்திய அரசின் புதிய விதிமுறைகள்
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?