பள்ளிக்கு நேரில் செல்ல விரும்பாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடம் நடத்தப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதை மாநில அரசு ஒத்திவைத்தது. கடந்த மாதம் வரை தினசரி 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். ஆனால் இப்போது ஆந்திராவில் தினசரி கொரோனா பாதிப்பு 3-4 ஆயிரமாக சரிந்துள்ளது.
நேற்று ஆந்திராவிலுள்ள மாவட்ட அதிகாரிகளுடனான வீடியோ கான்பரன்ஸின்போது, ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்று நாட்களில் பாடம் நடத்தப்பட வேண்டும் என்று ஜெகன்மோகன்ரெட்டி உத்தரவிட்டார். 1,3,5,7 வகுப்புகளுக்கு ஒரு நாளில் பள்ளி பாடங்கள் நடைபெறும், 2, 4, 6, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த நாள் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். பள்ளியில் 750 க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
பள்ளிகள் காலையில் மட்டுமே செயல்படும், ஆனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஷிப்ட் முறை வகுப்புகள் நவம்பர் மாதத்திற்கு மட்டும் செயல்படுத்தப்படும் என்றும், கோவிட் -19 நிலைமையை அடிப்படையாகக் கொண்டு டிசம்பர் மாதத்திற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்