மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவக்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு மாத காலமாகியும் ஆளுநர் இதுகுறித்து முடிவு அறிவிக்கவில்லை.
ஆளுநர் ஒப்புதல் அறிவிக்கும் வரை மருத்துவ கலந்தாய்வு நடத்தப்போவதில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து நேற்று, தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், அன்பழகன், சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு ஆளுநரும் விரைவில் ஒப்புதல் அளிக்க சம்மதம் தெரிவித்ததாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி
ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்!
கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட @CMOTamilNadu முன்வர வேண்டும்! pic.twitter.com/eCGyxPXD5s— M.K.Stalin (@mkstalin) October 21, 2020Advertisement
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக்கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார். கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு!
முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி