[X] Close

அடடா..! அருமை..! பாடல் கற்கும் பிஞ்சு முகத்தின் அசத்தல் பாவனைகள்..! - வைரல் வீடியோ!

Subscribe
Amitabh-Bachchan-shared-video-on-Kids-classical-singing-lesson-goes-viral

சிறுவன் ஒருவன்  க்யூட்டாக கிளாசிக் பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளைங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.


Advertisement

ஸ்மார்ட்போன்கள் வந்ததிலிருந்து சிறு சிறு சம்பவங்களும் வீடியோ மற்றும் புகைப்படம் மூலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதிலும் தற்போதைய லாக்டவுன் காலகட்டங்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களையும், அவர்களுக்குள் இருக்கும் திறமைகளையும் வெளிக்கொணர்வதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு சிறுவர்களின் வீடியோக்கள் வைரலாகி வந்துள்ளன. உதாரணமாக, யம்மா என்ன காப்பாத்துமா என சிறுவன் கதறி அழும் வீடியோ, குறும்பு செய்யமாட்டேன் என சிறுவன் அம்மாவிடம் தாஜா செய்யும் வீடியோ, நாளைக்கு கண்டிப்பாக படிக்கிறேன் என சத்தியம் செய்யும் சிறுவன் வீடியோ என பல குறும்பு வீடியோக்கள் வைரலாகியுள்ளன. அதேபோல் சிறுமி ஒருவர் தனது நினைவாற்றலை வெளிப்படுத்தி வெளியிட்ட வீடியோ மூலம் உலக சாதனையைக்கூட படைத்துள்ளார்.


Advertisement

அந்த வரிசையில், தற்போது சிறுவன் ஒருவன் க்யூட்டாக கிளாசிக் பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளைங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இதுகுறித்த வீடியோவை பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், பகிர்ந்து “குழந்தை அந்த நபருக்கு அப்பன்” என தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் சிறுவனின் தந்தை சிறுவனுக்கு பாடல் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால் அந்த சிறுவன் தந்தையை பார்த்து பல முக பாவனைகளுடன் க்யூட்டாக பாடல் பாடுகிறார். இந்த க்யூட் வீடியோ, பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தாமல் இருக்காது என்றே சொல்லலாம்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close