நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் மாறியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
அரியலூர் மாவட்டம் தத்தனூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், அப்பகுதியில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்தார். பன்னிரெண்டாம் வகுப்பில் 299 மதிப்பெண்கள் பெற்ற அவர், நாகை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளார். 3 கேள்விகளுக்கு மட்டுமே அவர் விடையளிக்க தவறிய நிலையில், 680 மதிப்பெண்கள் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்துள்ளார். ஆனால், அவருக்கு வெறும் 37 மதிப்பெண்களே கிடைத்துள்ளன.
விடையளித்த ஓ.எம்.ஆர். தாளை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது, தான் விடைகுறித்த ஓ.எம்.ஆர். தாள் மாறியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். தான் விடையளித்த அசல் ஓ.எம்.ஆர். தாளை வழங்க வேண்டும் என மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் மனோஜ், ஓ.எம்.ஆர். விடைத்தாளில் குளறுபடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாள் மாற்றப்பட்டு, புதிதாக வேறு ஒரு ஓ.எம்.ஆர். ஷீட் இருப்பதாக கூறும் மனோஜ், மெயில் மூலம் புகார் அளித்தும், அலைப்பேசியில் தொடர்புகொண்டும் எந்தவித பலனும் இல்லை என்றார். மேலும் தனது 2 ஆண்டு முயற்சி யாரோ செய்த தவறால் வீணாகிவிட்டதாக அந்த மாணவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Loading More post
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை