ஆதிக்கம் செலுத்தும் மும்பை... வெல்லுமா கொல்கத்தா?

Mumbai-facing-Kolkatta-in-todays-match-at-IPL

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

அபுதாபியில் ‌நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடிய 7 போட்டிகளில் ‌4 வெற்றி‌களைப் பதிவு செய்துள்‌ளது.

image


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 2‌6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 20 போட்டிகளிலும், கொல்கத்தா அணி ‌6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌நடப்பு சீசனில் ஆதிக்கம் மிக்க அணியாக உள்ள மும்பை மற்றும் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்துள்ள கொல்கத்தா அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து அறிவோம்.

துபாய் மண்ணில் வென்றதே இல்லை என்ற நிலையில் நடப்பு சீசனில் களமிறங்கிய மும்பை அணி, முதற்பாதியில் ஆதிக்கம் மிக்க அணியாக உருவெடுத்துள்ளது. விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளைச் சந்தித்துள்ள அந்த அணி, அதிகமான நெட் ரன் ரேட்டையும் கொண்டுள்ளது. பேட்டிங்கில் குவிண்டன் டிகாக், சூர்யகுமார் யாதவ் இருவரும் பெரும் பலமாக உள்ளனர்.

image


Advertisement

கேப்டன் ரோகித் மற்றும் இஷான் கிஷன் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மத்திய வரிசையில் மூவேந்தர் கூட்டணியான பாண்ட்யா சகோதரர்கள் மற்றும் பொல்லார்டு வலு சேர்க்கின்றனர். பந்துவீச்சிலும் முத்திரை பதிக்கும் 3 பவுலர்களான, போல்ட், பும்ரா, மற்றும் பேட்டின்சன் பலமாக உள்ளனர். இவர்களுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார் சுழல் சூத்திரதாரி ராகுல் சாஹர்.

நான்கில் வெற்றி, மூன்றில் தோல்வி என சீசனின் முதல்பாதியை சுமாராக முடித்துள்ளது கொல்கத்தா அணி. மேல்வரிசையில் கில், திரிபாதி ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர். ரானா, கார்த்திக், ரசல், மார்கன் ஆகியோர் சறுக்கலைச் சந்தித்துள்ளது அணிக்கு பின்னடைவே. சுனில் நரைனின் பந்துவீச்சில் சர்ச்சை எழுந்ததை அடுத்து அவர் களமிறக்கப்படாமல் இருப்பது அணிக்கு பின்னடைவு.

image

அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட மட்டையாளர் பேன்டன் பெரிதளவில் சோபிக்காதது ஏமாற்றமே. பந்து வீச்சில் இளம் வீரர்கள் நாகர்கோட்டி, பிரசித் கிருஷ்ணா, பேட்டின்சன் ஆறுதல் அளிக்கின்றனர். சுழற்பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் அஸ்திரமாக உள்ளார். நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் பல முறை வீழ்ந்துள்ள கொல்கத்தா, பதிலடி கொடுத்து எழுச்சி பெறுமா என்பதே இன்றைய போட்டியிம் சுவாரஸ்யம்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement