போக்குவரத்து காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் போக்குவரத்து காவலரின் மீது காரை ஏற்றி, அவரை சில மீட்டர் தூரத்திற்கு காரில் தொங்கியபடி இழுத்துச்சென்ற‌ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

டெல்லி துவாலா கவுன் நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கார் ஒன்றை போக்குவரத்து காவலர் நிறுத்தியுள்ளார்.

ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வழியில் நின்றுக்கொண்டிருந்த போக்குவரத்து காவலர் மீது காரை ஏற்றி, வேகமாக சென்றுள்ளார். காரின் முன்பக்கத்தில் சிக்கிக்கொண்ட காவ‌லர், சில மீட்டர் தூரம் தொங்கியவாறே இழுத்து செல்லப்பட்டார். பின்னர், ஓட்டுநர் காரை வலது புறமாக இயக்க போலீஸ் காரின் இடது புறமாக கீழே விழுந்தார். தொடர்ந்து கார் அங்கிருந்து சென்றது. இதையடுத்து காவலரின் மீது காரை ‌ஏற்றி‌ய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement