மனைவியை கைது செய்த காவலர்கள்.. சட்டை கூட போடாமல் கலாட்ட செய்த நீதிபதி: வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அக்கம் பக்கத்தினருடன் சண்டையிட்ட தனது மனைவியை கைது செய்யவந்த காவலர்களை எச்சரித்த நீதிபதியின் வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது.


Advertisement

அமெரிக்காவின் நியூயார் நகரத்தின் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் மார்க் கிரிசாந்தி. இவரது மனைவி மரியாவுக்கும் அருகில் வசித்து வந்த குடியிருப்புவாசிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாகிவிட்டது. இதனால்,  குடியிருப்புவாசிகள் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் மரியாவை கைது செய்ய, அவரது கைகளில் விலங்கிட்டப்போது, அவர் கூச்சலிட்டுள்ளார்.

 image


Advertisement

’நீங்கள் கத்துவதை நிறுத்துங்கள்’ என்று காவலர்கள் கூறும்போது, ’அதுகுறித்து எனக்கு கவலை இல்லை’ என்கிறார் மரியா. அப்போது அங்கு சட்டைப்போடாமல் வந்த நீதிபதி மார்க் கிரிசாந்தி ‘நீங்கள் என் மனைவியை விடுவது நல்லது. என் மகளும் மருகனும் காவல்துறையில்தான் பணிபுகிறார்கள்.  இப்போது, அவளை விட்டு வெளியேறவில்லை என்றால் சிக்கலை சந்திப்பீர்கள்’ என்று திரும்பத்திரும்ப கத்துகிறார்.

image

ஆனால், காவல்துறை அவர்களை விடவில்லை. ரோந்துக் காருக்குள் அழைத்துச் சென்று அமரவைத்துவிட்டார்கள். கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவம் குறித்து எந்த வழக்குப் பதிவும் செய்யவில்லை. நீதிபதியும் எந்த புகாரையும் அளிக்கவில்லை. ஆனால், இப்போது இந்த வீடியோவை தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் வாங்கியுள்ளார்கள். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement