25வது பந்தில் முதல் பவுண்டரி .. முஷ்டியை முறுக்கிய கோலி.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் 25 ஆவது பந்தில் பவுண்டரியை அடித்த பின்னர் அதை கொண்டாடும் விதமாக உணர்ச்சி பிழம்பில் கேப்டன் விராட் கோலி ஆடுகளத்திலேயே தனது முஷ்டியை முறுக்கி காட்டினார். 


Advertisement

image

28 பந்துகள் விளையாடிய கோலி 33 ரன்களை எடுத்திருந்தார். இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். அதுவும் ஆட்டத்தின் பத்தொன்பதாவது ஓவரில் ஆஃப் சைடில் கிரீஸுக்கு வந்த கோலி அந்த பவுண்டரியை  ஓவரில் அடித்திருப்பார். அது கூட அவுட்சைட் எட்ஜாகி பவுண்டரி லைனை கடந்திருக்கும்.


Advertisement

இந்நிலையில் ‘ஒரு பவுண்டரி அடித்ததற்கெல்லாம் கொண்டாட்டமா?’, ‘அது பேட்டில் பட்டு எட்ஜானதால் கிடைத்தது’, ‘எதிர்முனையில் ஆடும் ஏபிடி 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அடித்துள்ளார்’, ‘ஏபிடி எங்க, நீங்க எங்க’ என ரகம் ரகமாக மீம்ஸ் போட்டு கேப்டன் கோலியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் ரசிகர்களில் சிலர் கோலிக்கு ஆதரவாகவும் ட்வீட் போட்டு வருகின்றனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement