பிளஸ் டூ முடித்தவர்களுக்கு நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகம் முழுவதும் பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை முதல் (அக்டோபர் 14) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கெனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதுபற்றிய அறிவிப்பை தமிழ்நாடு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


Advertisement

மதிப்பெண் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால், திருத்தப்பட்ட மதிப்பெண்களுடன் அசல் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படும். மாணவர்கள் தங்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையத்திலும் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

image


Advertisement

அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் தனித்தனியே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஒரே மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’பிப்ரவரி மாதமே காங்கிரஸில் இருந்து விலகும்முடிவை எடுத்துவிட்டேன்’ - குஷ்பு பேட்டி..!

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement