இறுதி ஓவரில் முறைத்துக்கொண்ட கலீல் - திவாதியா : சமாதானப்படுத்திய வார்னர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராகுல் திவாடியா மற்றும் கலீல் அகமது ஆகியோர் மைதானத்தில் வாதம் செய்தனர்.


Advertisement

ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டி நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 158 ரன்களை சேர்த்தது. இலக்கை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

image


Advertisement

அப்போது ஜோடி சேர்ந்த ரியான் பராக் மற்றும் ராகுல் திவாடியா ஆகியோர் இறுதி வரை நிலைத்து நின்று ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். இறுதி ஓவரில் 8 ரன்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, ஹைதராபாத் அணி சார்பில் கலீல் அகமது பந்துவீசினார். 4 பந்துகளில் அவர் 6 ரன்களை கொடுக்க, கலீல் அழுத்தத்திற்கு உள்ளானர். அப்போது ரன் ஓடிய திவாடிய அருகில் இருக்க கலீல் எதையோ முணுமுணுத்தார். உடனே ஆத்திரம் அடைந்த கலீல் திவாடியாவை முறைக்க, கலீல் திவாடியாவின் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு சென்றார். அப்போது அங்கே வந்த வார்னர் கலீலிடம் பேசினார். இறுதியில் ரியான் பராக் சிக்ஸ் அடிக்க ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

image

போட்டி முடிந்த பின்னர் களத்தில் இருந்த இரு அணி வீரர்களும் வாக்குவாதம் செய்து கொண்டனர். ஹைதராபாத் கேப்டன் வார்னருடன் திவாடியா வாக்குவாதம் செய்தார். அப்போது குறுக்கிட்ட நடுவரிடமும் அவர் ஆதங்கப்பட்டார். பின்னர் கலீல் அகமது ஓடி வந்து கைகொடுத்து, திவாடியாவின் தோளை பிடித்துக்கொண்டே நடந்தார். அப்போது கடுப்புடன் இருந்த திவாடியா கலீலிடம் எதையோ கோபமாக கேட்க, அப்போது ‘சரி விடு’ என்ற படி கலீல் அவரது தோளை விடவில்லை. இறுதியில் திவாடியாவும் கலீல் தோளை தட்டிக்கொடுத்து கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement