பெண்ணின் புகைப்படத்தை அவதூறாக பயன்படுத்திய கும்பல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 40 வயதான பெண் ஒருவர், இணையம் மூலம் பாலியல் தொழில் செய்யும் ஒரு கும்பல் தனது புகைப்படங்களை வாட்ஸப், ஃபேஸ்புக்கில் பயன்படுத்துவதாக புகார் அளித்துள்ளார்.


Advertisement

image

உத்தரபிரதேசத்தில் நடந்த மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 40 வயதான மென்பொருள் நிபுணர் ஒருவர் நொய்டாவில் உள்ள செக்டர் 49 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இணையவழி மோசடி பாலியல் தொழில் செய்யும் ஒரு கும்பல் தனது படங்களை வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் ஒரு தொலைபேசி எண்ணுடன் பரப்பி வருவதாகக் கூறியுள்ளார். அந்த பெண் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படங்களைப் பயன்படுத்தி, அந்த கும்பல் பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு முன்பணம் வசூலித்தும் மோசடி செய்துள்ளனர்.


Advertisement

இரண்டு குழந்தைகளின் தாயான அந்த பெண் “எனது நண்பர்கள் சிலர் பாலியல் தொழில் வழங்கும் அந்த கணக்குகளில் எனது படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் வாடிக்கையாளர்கள் அணுகுவதற்கு ஒரு வாட்ஸ்அப் எண்ணும் இருந்தது. படங்கள் என்னுடையவை என்றாலும், அவற்றின் பெயர் வேறுபட்டதாக இருந்தது. என்னுடைய நண்பர் அந்த எண்ணிற்கு டயல் செய்தபோது, ஒரு நபர் அழைப்பைப் ஏற்று, என்னை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ய வங்கிக் கணக்கில் பணம் அனுப்புமாறு கோரினார்” என தெரிவித்துள்ளார். “காவல்துறை அதிகாரிகள் எனது புகாரை சைபர் பிரிவிற்கு அனுப்பி வைப்பதாகவும், அங்கிருந்து புகாரை நடைமுறைப்படுத்த 15 நாட்கள் ஆகும் என்றும், அந்த கணக்குகள் முடக்கப்படும் என்றும் சொன்னார்கள். ஆனால் இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை, "என்று கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement