ஆடுகளை திருடிக்கொண்டு பயணம் : போலீசாரிடம் சிக்கிய திருடர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குளத்து பட்டியைச் சேர்ந்தவர் உலகப்பன். இவர் தனது ஊரில் பட்டி அடைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது பட்டியிலிருந்து திடீரென ஆடுகள் காணாமல் போய்விட்டது. இதுதொடர்பாக உலகப்பன் திருமயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


Advertisement

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட எல்லையான சவேரியார்புரத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தபோது இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை கொண்டு வந்துள்ளனர். அந்த இரண்டு நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் போலீசாசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததையடுத்து அவர்கள் இருவரையும் திருமயம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஒருவர் குளத்து பட்டியைச் சேர்ந்த பெரியய்யா என்பதும் மற்றொருவர் உடையாளிப்பட்டி சேர்ந்த ராசு என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து குளத்துப்பட்டியில் உள்ள உலகப்பனுக்கு சொந்தமான பட்டியில் ஆடு திருடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement