வடகொரியாவில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை: கிம் ஜாங் உன் பெருமிதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வடகொரியாவில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.


Advertisement

image

வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இராணுவ அணிவகுப்பில் பேசிய வட கொரிய அதிபர் கிம் ஜாங்உன் “ நம் நாட்டின் ஒரு குடிமகன் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை”என்று கூறினார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பேரிடரை தடுப்பதில் வடகொரிய படைகள் செய்த தியாகத்திற்கு கிம் நன்றி தெரிவித்தார். நம் நாடு தனது தேசிய பாதுகாப்பு சக்தியை தொடர்ந்து கட்டமைக்கும் என்றும் அவர் கூறினார்.


Advertisement

“ உலகையே பேராபத்திற்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம்நாட்டில் பரவாததற்கு காரணம் நமது தொழிலாளர் கட்சியின் ஆட்சிதான். அதனால்தான் இந்த வெற்றி சாத்தியமானது” என்றும் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.

Courtesy: https://www.aninews.in/news/world/asia/not-one-n-korean-fallen-victim-to-covid-19-says-kim-jong-un20201011061455/?utm_campaign=fullarticle&utm_medium=referral&utm_source=inshorts

loading...

Advertisement

Advertisement

Advertisement